விடை தெரிந்தால் சொல்லுங்கள்

ஒரு ஊரில் சுப்பன் குப்பன் மணியன் ஆகிய மூவர் உற்ற நன்பர்களாக இருந்தார்கள் இவர்கள் காலை உணவை உணவுகடைகளில் உண்பது வழமை அவ்வாறு ஒருநாள் மூவரும் உணவருந்தியபின்னர் உணவுக்கான பணம் 30 ருபாய் என கூறினான் சர்வர் பையன் இவர்கள் மூவரும் தலா 10 ரூபா கொடுத்து 30 ரூபாவை முதலாளியிடம் கொடுத்துவிட்டு சென்றார்கள் இ அவர்கள் போனபின்பு முதலாளி யோசித்தார் இவர்கள் தினமும் கடைக்குவருவதால் இவர்களிடம் 25 ரூபா எடுக்க எண்ணி மீதி 5 ரூபாவை கடை பையனிடம் கொடுத்து அவர்களிடம் கொடுக்க சொன்னார் அவனும் கொடுக்க கொண்டு சென்றான் செல்லும்வழியில் அவன் யோசித்தான் இவர்களுக்கு ஏன் 5 ரூபா என்றுவிட்டு 2 ரூபாவை தான் எடுத்துக்கொண்டு மீதி 3 ரூபாவை அவர்களிடம் கொடுத்தான்,
அவர்கள் அதை தங்களுக்குள் ஒவ்வொரு ரூபாவாக எடுத்து கொண்டார்கள் சரிதானே

இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே
ஒருவரின் சாப்பாட்டு செலவு = 10-1 =9 அதாவது ஒருவர் 10 ரூபா கொடுத்தார் கடை பையன் 1 ருபா திரும்ப கொடுத்தான் இதனால் ஒருவரின் செலவு 9 ரூபாய்

9*3=27
பையனிடம் உள்ள பணம் =2ரூபாய்
27+2=29

அவர்கள் கொடுத்த 30 ரூபாவில் 29 ரூபா கணக்கில் உள்ளது ஆனால் அந்த 1 ரூபா எங்கே தெரிந்தால் சொல்வுங்கள்

2 comments:

Anonymous said...

Athuthaan Ithu

Anonymous said...

Pugazh(9597487112):Hello antha 27 rupees la,25 rupees owner ku,balance 2 rupees dhan anthan paiyanaku,so 25+2=27.. Apram antha 3perum thala 1rupee so 27+3=30.. Now its correct...Neenga solra 27+2=29 wrong calculation.. Muttal thanama yoschikathinga..

 

Kadi SmS | Copyright © 2011 | Powered by Blogger | Blog Designed By Yogen Basnet