ஒரு ஆரம்பப் பள்ளிக்கு அதிபர் புஷ் வருகை புரிந்தார்.. சிறு உரைக்குப் பின் மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாரானார்..
ஒரு மாணவன் கை உயர்த்தினான்..
புஷ் ; நல்லது.. உன் பெயர் என்ன்..?
மா ; பாப்..
புஷ் ; எது வேண்டுமானாலும் கேள் பாப்..
பாப் ; நன்றி அதிபரே..! என்னிடம் மூன்று கேள்விகள் உள்ளன..
1 ..ஐ.நா.சபை தடுத்தும் கேட்காமல் ஈராக் மீது போர் தொடுத்தது ஏன்..?
2.. திரு. கெர்ரி உங்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் அதிபர் ஆனது எப்படி..?
3.. ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்போது..?
புஷ் பதிலளிக்கத் திணறிக்கொண்டிருக்கும் போது இடைவேளைக்கான மணி அடிக்கவே கேள்வி நேரம் நிறுத்தப்பட்டது.
இடைவேளைக்குப் பின்.. உற்சாகமாக வந்த புஷ். கேள்விகளைத் தொடரச் சொன்னார்.. மிகுந்த தன்னம்பிக்கையுடன்..
ஒரு மாணவன் கை உயர்த்தினான்..
புஷ் ; நல்லது.. உன் பெயர் என்ன்..?
மா ; ஆல்ன்..
புஷ் ; எது வேண்டுமானாலும் கேள் ஆலன்..
ஆலன் ; நன்றி அதிபரே..! என்னிடம் ஐந்து கேள்விகள் உள்ளன..
1 ..ஐ.நா.சபை தடுத்தும் கேட்காமல் ஈராக் மீது போர் தொடுத்தது ஏன்..?
2.. திரு. கெர்ரி உங்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் அதிபர் ஆனது எப்படி..?
3.. ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்போது..?
4.. 20 நிமிடங்கள் முன்னதாகவே இடைவேளைக்கான மணி அடிக்கப் பட்டது ஏன்..?
5.. மாணவன் பாப் எங்கே..? அவனை என்ன செய்தீர்கள்..?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment