
ஒரு ஊர்ல.. ஒரு வெங்காயம், தக்காளி, ஐஸ் கிரீம் அப்படின்னு மூன்று நண்பர்கள் இருந்தாங்களாம்.
ஒரு நாள் மூவரும் கடற்கரைக்குப் போனாங்களாம். அப்ப சொல்ல சொல்லக் கேக்காம ஐஸ் கிரீம் , தண்ணீருக்குப் போய் கரைஞ்சிப் போச்சாம். தக்காளியும் வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதாங்களாம்.
வீட்டுக்கு வற வழியில லாரி மோதி தக்காளி நசுங்கிப் போச்சாம்.
உடனே வெங்காயம் அழுதுக்கிட்டே கடவுள் கிட்ட வேண்டிக்கிச்சாம்.
" ஐஸ் கிரீம் செத்தப்ப நானும் தக்காளியும் அழுதோம்,
இப்போ தக்காளி செத்தப்ப நான் அழுதேன்..
ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா? ன்னு கேட்டுச்சாம்.
அதற்கு கடவுள், "சரி இனிமே நீ சாகும் போது பக்கத்துல இருக்குற எல்லாருமே அழுவாங்க" ன்னு சொன்னாறாம்.
இப்பத் தெரிதா ஏன் வெங்காயம் நறுக்கும் போது நாம அழறோம்ன்னு!!
0 comments:
Post a Comment