Tamil joke sms

ஒரு படகில் மூன்று ஊர்காரங்க பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

1.குறிஞ்சிப்பாடி

2. சென்னை

3. மதுரை

திடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது. மூன்று பெரும் நடுங்கி
போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது.

"உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்" என்றது. மூன்று பேரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. "உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன்.

அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போட வேண்டும்.
அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள்
தோற்று போனதாய் அர்த்தம்.

"மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்...
சென்னை காரன் தன் கையில் போட்டிருந்த
மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.    மதுரைக்காரன் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான்.   பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.

பேய் சிரித்தது.....

"இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?"

உடனே குறிஞ்ச்சிப்பாடிகாரன் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு ...

"இந்த தண்ணீரை கொண்டு வா!" என்றான்....பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.

நீதி: இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்'க்கே தண்ணி காட்டுபவங்க குறிஞ்ச்சிப்பாடிக்காரங்கதான் மட்டும் தான்.

என்ன நான் சொல்லுறது...
😀😄..........😄😀🍀☘🌿

Latest Tamil what's app jokes sms

😂 சிரிப்பு கதம்பம்.😂😂

😁😁😁😁

அவர்: ஏன்டா உங்க அப்பன் பேர பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச??

இவன்: என் பெயர் கெட்ராம பாத்துக்கன்னு அவர்தான் சொன்னாரு..
😁😁😁😁😁

பேராசிரியர்: சாப்ட்வேர்னா என்னா, ஹாடுவேர்னா என்னா?

இவன்: செடியில உள்ளது சாப்ட்வேரு.. மரத்துல உள்ளது ஹாடுவேரு.
😂😂😂😂

அவர்: ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.

இவர்: எப்படி.?

அவர்: ரெண்டு கைலயும் சாம்பார் வாளிய தூக்கிட்டு போறமாதிரி நடப்பானுங்க.
😁😁😁😁

அவர்: ஆண்கள்ல 65% பேர் மனைவி சொல்றத கேப்பாங்க.

இவர்: அப்ப மீதி பேர்?

அவர்: இன்னும் கல்யாணம் ஆகல.
😂😂😂😂

சோமு: நாட்ல அநியாயம் நடக்குது..

பாபு:எப்புடி சொல்றீங்க.?

சோமு: வெயில் காலத்துல மோர் பந்தல் வைக்கிற மாதிரி, மழை காலத்துல டீபந்தல் வைக்கமாட்றாங்களே.!
😁😁😁😁

அவர்: டாக்டருக்கு நீட் தேர்வு வேணுமோ வேண்டாமோ ஆனா ஒரு தேர்வு அவசியம்.

இவர்: என்ன அது?

அவர்: நீட்டா எழுத தேர்வு. என்னா எழுதுறார்னு ஒன்னுமே புரியமாட்டேங்குது.
😂😂😂😂

அவர்: அபராதத்திற்கும், வரிக்கும் வித்தியாசம் தெரியுமா?

இவர்: தெரியாது சொல்லுங்க.

அவர்: தவறான செயலுக்கு தண்டம் கட்டுனா அபராதம்..
சரியான செயலுக்கு தண்டம் கட்டுனாஅது வரி.!
😂😂😂

அவன்: இதோ போறானே அவனுக்கு பொது அறிவு சுத்தமா இல்ல.

இவன்: எப்டி சொல்றீங்க?

அவன்: பழமொழிக்கு இங்லீஸ்ல என்னன்னு கேட்டான். புரூட் லாங்வேஜ்னு சொன்னா ஒத்துக்க மாட்றான்.
😂😂😂😂

டாக்டர்: இந்த மருந்த காலைல வெறும் வயத்துல சாப்டுங்க..

வந்தவர்: ஒரு பனியன்கூட போட்ருக்ககூடாதா டாக்டர்.?
😂😂😂😂

கனவன்: என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு.?

மனைவி: நீங்கதானே சமையல்ல சேஞ்ச் வேனும்னு சொன்னீங்க.?!
😁😁😁😁

அவர்: அச்சனை உங்க பேருக்கா.?

இவர்: சாமி பேருக்கே பண்னுங்க.. எனக்கு தினம் வீட்டலயே அர்ச்சனை நடக்குது.
😁😁😁😁😁

அவர்: உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.?

இவர்: கூகுள்னு.. எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா..
😂😂😂😂😁

தீபாவளி எபக்ட்...

மனைவி: எனக்கு இதே டிசைன்ல வேற கலர்ல காட்டுங்க !!

கணவன்: அடியேய் ! துணி எல்லாம் எடுத்து முடிச்சு நாம இப்ப காய்கறி கடைல இருக்கறோம்!!
😂😂😂😂

தாத்தா : அந்த காலத்துல உன் வயசுல நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா  வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்.. தெரியுமா ?

பேரன் : இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா.. எல்லா கடையிலயும் நிறைய C C TV காமரா வச்சுருக்காங்க...!
😁😁😁😁😁

அவர்: 🕺“என் பொண்ணு பின்னாடியே சுத்துறியே.. தம்மு, தண்ணி பழக்கம் இருக்கா…?”🚬

இவன்: “வீணா சந்தேகப்படாதீங்க சார்..! 🤗
உங்க பொண்ணு ரொம்ப நல்ல டைப்..”
😁😁😁😁😁

Tamil jokes sms, Tamil u funny what's app sms

Tamil husband wife funny joke sms

🙏😎😎🤠🤡🤓🤗😝😆🙏
*கொஞ்சம் சிரிங்க பாஸ்!*

குமரேசன் தான் வேலை செய்யும் கம்பனியில் இருந்து வெளியே வந்தான். சின்னப்பன் நேராக இவனிடம் வந்து "ஒரு கட்டிங் போட்டுட்டு போலாமா" என்றான். "சரி" என்று குமரேசன் அவனுடன் நடந்தான். வழியில் குமரேசனுடைய செருப்பு 'சரக்' என அறுந்தது.  குமரேசன் கண்களில் நீர் அருவியாய் பெருக்கெடுத்தது.

"டேய், ஒரு சாதாரண செருப்பு பிஞ்சு போனதுக்கா இப்படி கண்ணீர் விடற?" என்று சிரித்தான் சின்னப்பன்.

"அதுக்கு இல்ல, என் மனைவி ஒரு தீர்க்கதரிசி.. அது எனக்கு இப்போ தான் தெரிஞ்சுது" என்றான்.

"ஓஹோ.. அது எப்படி தெரிஞ்சுது?" என்றான் சின்னப்பன்.

"காலைல வரும்போதே என் பொண்டாட்டி சொன்னா, 'வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வராம சாரயகக்கடைக்கு போனேனா செருப்பு பிஞ்சுடும்'னு. இப்போ பாரு அதே மாதிரி நடந்துருச்சு."

😂😜😁😃😉🤣😝🤓🤠
Tag : tamil funny sms, tamil joke, tamil husband wife jokes,

Husband wife தாம்பத்யம் / nice one read fully

தாம்பத்யம்!

அந்த முதியவர் தடுத்தடுமாறியபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். எனது டூ வீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

"என்னங்க ஆச்சு"னு கேட்டேன்.
"வேகமாக வந்த ஆட்டோ சக்கரம் காலுல ஏறிடுச்சு தம்பி" என்றார்.

"வாங்க ... எனக்கு தெரிந்த டாக்டர் பக்கத்துல தான் இருக்கார், கட்டுப் போட்டு மொதல்ல ரத்தம் கசியறத நிறுத்தணும். கூடவே டி.டி இஞ்செக்‌ஷனும் போட்டுக்கலாம்!" என்றேன்.

வேண்டாம் என்று மறுத்தவரை விடாப்பிடியாக அழைத்து சென்றேன்.

எல்லாம் முடியவும்.... "மணி என்ன தம்பி.... நேரமாயிடுச்சே.. நேரமாயிடுச்சே...!" என்று பறந்தார் பெரியவர்.

"அப்படி என்னங்க அவசரம்..?! "என்றேன் நான்.

"என் பெண்டாட்டி பசியோட வீட்டில இருக்கா. அவளுக்கு இட்லி வாங்கிட்டு போகணும்..!" என்றார்.

"என்ன பெரியவரே... உங்க காலுல அடிப்பட்டிருக்கு... இப்ப இட்லியா முக்யம்...?! லேட்டா போனாத்தான் என்ன, திட்டுவாங்களா...?!" என்று சீண்டினேன்.

அதற்கு அவர் "அவ அஞ்சு வருஷமா மனநிலை பாதிச்சு நினைவில்லாம இருக்கா தம்பி. எல்லா ஞாபகமும் போயிடுச்சி! நான் யார்னுகூட அவளுக்குத் தெரியாது...!" எனவும்,

நான் "அப்படிப்பட்டவங்க உங்களை லேட்டுன்னு எப்படி கேப்பாங்க...? அவங்களுக்குத் தான் உங்களை யாரென்றே தெரியாதே! கவலை படாதீங்க" என்றேன்.

அதற்கு அந்த முதியவர் புன்னகைத்தபடியே என்னை பார்த்து

 "ஆனா அவ யாருன்னு எனக்குத் தெரியுமே தம்பி..!"

இது தான் தாம்பத்யம்!
 

Kadi SmS | Copyright © 2011 | Powered by Blogger | Blog Designed By Yogen Basnet