நீ நீயாகவே மனிதனாகவே இரு .. Be yourself and be human .. Tamil short story

Once upon a time Mahakavi Kalidasa ...

 ஒரு முறை மகாகவி காளிதாசர்... 


வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது, தாகம் எடுத்தது...

சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்...

ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர்


காளிதாசர் அவரைப் பார்த்து 

அம்மா தாகமாகஇருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? 

என்று கேட்டார்...


அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன்,,

உ௩்களை அறிமுகம் செய்து கொள்ளு௩்கள் என்றாள்..


உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, 

இந்த பெண்ணிடம் 

நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து ..

நான் ஒரு பயணியம்மா என்றார்...


உடன் அந்த பெண், 

உலகில் இரண்டே இரண்டு,,

பயணிகள் தான்! ஒருவர் சந்திரன் ! ஒருவர் சூரியன் ! 

இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள்..

என்றாள்...


சரி என்னை விருந்தினர் 

என்று வைத்துக்கொள் என்றார் காளிதாசர்...


உடனே அந்த பெண், 

உலகில் இரண்டு

பேர்தான் விருந்தினர் .. ஒன்று செல்வம் , இரண்டு இளமை !

இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்...


சற்று எரிச்சலான காளிதாசர்,,

தான் ஒரு பொறுமைசாலி என்றார்...


உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்! 

ஒன்று பூமி ! எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தா௩்கும்!

மற்றொன்று மரம் ! யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்...


சற்று கோபமடைந்த காளிதாசர்,

நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்...


அதற்கும் அந்த பெண்,, 

உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்! ஒன்று முடி ! மற்றொன்று நகம் !

இரண்டும் எத்தனை முறை 

வேண்டாம் என்று வெட்டினாலும்,,

பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி...


தாகம் அதிகரிக்கவே 

நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்...


உடனே அந்த பெண், 

உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்! ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன் 

மற்றவன் அவனுக்கு துதிபாடும் அமைச்சன் ! என்றாள்...


காளிதாசர்  செய்வதறியாது,

அந்த பெண்ணின் காலில் விழுந்தார்...


உடனே அந்த பெண்,, மகனே, எழுந்திரு என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்..

 சாட்சாத் சரஸ்வதி தேவியே 

அவர் முன் நின்றாள்...


காளிதாசர் கைகூப்பி வண௩்கியதும், 

தேவி, தாசரைப்பார்த்து காளிதாசா..

எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்.. 

நீ மனிதனாகவே இரு என்று 

தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்! 

           

இதுபோலத்தான் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும்,

வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கிறார்களே தவிர, 


மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, 

நம் தாய் நாட்டிற்கு, 

நமக்கு உணவு தரும் பூமிக்கு,,

நாம் என்ன செய்ய வேண்டும் 

என்பதை கற்றுத்தரவேண்டும்..


பெற்றோரை தாய்நாட்டை , 

உறவுகளை பிரிந்து, 

ஏசி அறையே உலகம், 

தொலைபேசியே உறவு, 

பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையென,

வாழ்க்கையை இயந்திரமயமாக்கி,

மனித நேயமில்லா வாழ்க்கை

வாழக்கூடாது...


நீ நீயாகவே மனிதனாகவே இரு ..  மனிதநேயம்  மலர மகிழ்வித்து  மகிழ்ந்திரு..... 

நலம் உண்டாகட்டும்

வாழ்க வளமுடன்..


In English...

Once upon a time Mahakavi Kalidasa ...


While walking in the sun in the field, he got thirsty ...

In the distance, a villager was fetching water from a well in a jug ...


Kalidasa looked at him

Will you give Mom some water to keep her thirsty?

He asked...


That village girl, I give ,,

Introduce yourself.


Immediately Kalidasa had an uplifting attitude,

To this girl

Wondering if we should say who?

I said a traveler ...


With that girl,

Only two in the world,

That's passengers! One is the moon! One is the sun!

These are the ones who travel day and night.

If ...


Well guest me

Kalidasa said keep that ...


Immediately the woman,

Two in the world

People are the guest .. One is wealth, two are youth!

If these two come as guests and leave immediately ...


Kalidasa, slightly annoyed

Just a patient said ...


Immediately the woman and the two of them!

One Earth! No matter how much you step on it, no matter who steps on it!

Another tree! Whoever beats a stone will bear fruit ...


Slightly annoyed Kalidasa,

I said I was a stubborn ...


And that girl ,,

There are only two stubborn people in the world! End one! Another nail!

How many times both

Even if you say no,

If you grow up stubbornly laughing ...


To increase thirst

I told myself I was an idiot ...


Immediately the woman,

There are two fools in the world! One is the king who does not rule the country

The other is the minister praising him! If ...


Kalidasa does not know how handle  it...

Fell at the woman's feet ...


Immediately, the woman, son, got up and saw that Kalidasa went straight to the mountain ..

Satsad Saraswati Devi

He stood in front ...


When Kalidasa saluted the handkerchief,

Goddess, Kalidasa looking at Dasara ..

He who perceives himself to be human attains the pinnacle of human nature.

That you be human

Goddess Saraswati gave the jug of water to Kalidasa and disappeared!

           

This is how children make money in the future,

Apart from being taught by parents to live comfortably,


As a human being, mother, father, wife, people, relatives,

To our motherland,

To the earth that feeds us,

What should we do

To teach ..


Parents homeland,

Separating relationships,

AC Room World,

Phone relationship,

Making money is life,

Mechanizing life,

Life without humanity

Don't live ...


Be yourself, be human .. Enjoy the flower of humanity .....

Good luck



0 comments:

 

Kadi SmS | Copyright © 2011 | Powered by Blogger | Blog Designed By Yogen Basnet