Tamil super Joke

ஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்களாம், அவங்க பயங்கர குறும்பு.
எப்ப பாத்தாலும் ஏதாவது ப்ரச்னை பண்ணி பக்கத்து வீட்டுக்காரங்க
அவங்கம்மா கிட்ட கம்ப்ளைன் பண்ணிட்டே இருப்பாங்களாம்.அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் இவங்களை திருத்த முடியல.


அப்ப தான் அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார்.அவங்கம்மாவும் சின்னவனை திருத்தலாம்னு கூட்டிட்டு போனாங்களாம்.


அந்த சாமியார பையன் விநோதமா பார்க்க அவர் சிரிச்சிக்கிட்டே கேட்டார்
"கடவுளை பாத்திருக்கியா?"
பையன் புரியாம முழிச்சான்.
திரும்பவும் அவர் ,"கடவுள் எங்கிருக்கார்னு தெரியுமா"ன்னார் லைட்டா முறைச்சிக்கிட்டே.பையன் லேசா கலவரமாயிட்டான்.
அவர் விடாம "சொல்லு கடவுள் எங்கிருக்கார்?"
பையன் பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்கு ஆச்சர்யம்.


அவர் அப்புறமும் "கடவுள் எங்கே சொல்லு கடவுள் எங்கே"ன்னு கேட்க
பையன் சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓட்றான் வீட்டை பாத்து.
வீட்டுக்குள்ளே அண்ணன் ரூமுக்கு போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க அண்ணன் கேட்டான் "என்னடா பிரச்னை ஏன் இப்டி ஓடி வர்ர?"


"இல்ல நிலைமை மோசமாய்டிச்சி"
"ஏன் என்னாச்சு?"
"கடவுளை காணோமாம்"
"அதுக்கு?"

"எல்லோரும் நம்மளை சந்தேகப்படறாங்க"

0 comments:

 

Kadi SmS | Copyright © 2011 | Powered by Blogger | Blog Designed By Yogen Basnet