தவறாமல் படித்து சிரியுங்கள்

தவறாமல் படித்து சிரியுங்கள்

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ஒரு பையனும் அவன் அப்பாவும்
ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றனர். அங்கே உள்ள எல்லாவற்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அனைத்திலும் அவர்களுக்கு மனம் கவர்ந்தது லிஃப்ட் (மின் தூக்கி) தான். லிஃப்டைப் பார்த்து, பையன் அப்பாவிடம் "அது என்னப்பா?" என்று கேட்டான். "மகனே, இது போல் ஒன்றை நான் வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை. எனக்குத் தெரியாது" என்றார் அப்பா.

சிறிது நேரத்தில் வயதான் ஒரு மூதாட்டி லிஃப்ட்டின் அருகே வந்து ஒரு பொத்தானை அழுத்த, கதவு திறந்தது. மூதாட்டி உள்ளே சென்றார். பொத்தானை அமுக்கினார். கதவு மூடியது. லிப்ட்டுக்கு வெளியே சின்னச்சின்ன வட்ட வட்டமான விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக எரிந்தன்; அணைந்தன. மறுபடியும் கதவு திறக்கையில் 24 வயதுள்ள அழகான பெண்மணி வெளியே வந்தார்.

இதை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அப்பா சொன்னார்: "ஓடிப் போய் உன் அம்மாவை அழைத்து வா".

0 comments:

 

Kadi SmS | Copyright © 2011 | Powered by Blogger | Blog Designed By Yogen Basnet